யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு  மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை  (29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில்  சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள்.

அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த  கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆளணி எமக்குள்ள ஒரு பாரிய சவாலாக விளங்குகிறது. இருந்த போதும் எம்மிடம்  காணப்படுகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி  சேவையாற்றி வருகிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top