பெண் கைதிகள் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர்

keerthi
0

 


ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. 

அத்தோடு    ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள். 

ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top