உஷ்ணத்தை தவிர்க்கும் வெள்ளரிப்பழத்திற்கு (புட்டரிப்பழம்) அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பெரும் கிராக்கி நிலவுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படும் வெள்ளரிப்பழம் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களால் அதிகளவில் கொள்வனவு செய்யப்படுகின்றது.
இவ்விரு மாவட்டங்களிலும் அதிக உஷ்ணம் நிலவுவதாலும், முஸ்லிம் மக்களால் புனித நோன்பு நோற்கப்படுவதாலும் இப்பழத்திற்கு அதிக கிராக்கி நிலவுவதுடன் அதிகவிலைக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.