மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்க நடவடிக்கை..!!

tubetamil
0

 பாடசாலை மாணவர்களின் அன்றாட புத்தகச் சுமையை குறைப்பதற்கு கல்வி அமைச்சு புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சிப் புத்தகங்கள் தவிர்ந்த ஏனைய பாடப்புத்தகங்களை மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு கொண்டுவருவதை குறைப்பதற்கு கல்வி அமைச்சு புதிதாக நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்க அது தொடர்பில் அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக கல்வியமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். பாடசாலை புத்தகப் பைகளின் சுமை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத்தண்டு பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சு ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது. அதனைக் கருத்திற்கொண்டு மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top