ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையா..? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

keerthi
0


 ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

அத்தோடு    எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும், ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top