புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் 16 சிறைக்கைதிகள் விடுதலை...!

keerthi
0

 


மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இன்றையதினம் 16 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில்  மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 சிறைக் கைதிகள் இன்று(13)  காலை விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top