ரணிலுக்கே முழு ஆதரவு! - கல்வி இராஜாங்க அமைச்சர் பகிரங்க அறிவிப்பு

keerthi
0


 

இலங்கையில் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும். என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 2025 ஆகஸ்டில்தான் முடிவடைகின்றது. எனவே, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே ஏற்புடையதாக அமையும்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு அவசியம். 

கடந்தமுறை சம்பள நிர்ணய சபை ஊடாகவே தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது. இம்முறையும் அவ்வாறு நடக்கும் என நம்புகின்றேன்." - என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top