யாழில் புதிய எட்டு மாடி மருத்துவ பீடக் கட்டடத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

keerthi
0



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.


வடக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பினையேற்று இரண்டு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதியினால் இக்கட்டித் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய நவீன சத்திரசிகிச்சை தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உட்பட பல நவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top