கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

keerthi
0


 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் தொடர்பில் விமான நிலையமும் விமானச் சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் சாரதிகள் இன்றி விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,

 அத்தோடு  விமானப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வருகை தரும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை முனையத்தை விட்டு வெளியேற வேண்டும்.

அத்துடன், 30 நிமிடங்களுக்கு மேல் விமான நிலையத்திற்கு அருகில் சுற்றித் திரியும் வாகனங்களின் சாரதிகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top