ஜிவி பிரகாஷ் பிரிவுக்கு பின் பாடகி சைந்தவி எடுத்த அதிரடி முடிவு.. என்ன செய்தார் தெரியுமா?

tubetamil
0

 


இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தது திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறு வயது முதல் இருவரும் நட்பாக பழகி அதன் பின் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் தான் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது சைந்தவி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.

இதுநாள் வரை சைந்தவி சமூக வலைதளங்களில் சைந்தவி பிரகாஷ் என்ற பெயர் இருந்த நிலையில் தற்போது பிரகாஷ் என்ற பெயரை நீக்கி சிங்கர் சைந்தவி என்று பெயரை மாற்றி உள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியை மீண்டும் இணைத்து வைக்க இருதரப்பு பெற்றோர்கள் முயற்சி செய்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரகாஷ் பெயரை சைந்தவி நீக்கி உள்ளதால் இனி இருவரும் இணைய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இருப்பினும் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் இணைந்து ’சார்’ என்ற திரைப்படத்தில் பனங்கருக்கா என்ற பாடலை பாடி இருந்தனர். ஆனால் இந்த பாடல் அவர்கள் பிரிவு அறிவிப்புக்கு முன்பே ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இனிமேல் இருவரும் தொடர்ந்து பாடுவார்களா என்பது கேள்விக்குறியே என்று கூறப்பட்டு வருகிறது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top