தாறுமாறாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி விலை..

tubetamil
0

 ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றும் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்துள்ள நிலையில், இன்றும் சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,760 ஆகவும் சவரன், ரூ.54,080 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து, 6,785 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 480 அதிகரித்து, 54 ஆயிரத்து 280 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த மாதங்களில் 50 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது 55 ஆயிரத்தை நெருங்கி செல்வது பாமர மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இதே போன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.100.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.1.00,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top