தமிழகத்தில் சரவணா செல்வரத்தினம் கடை மிகவும் பிரபலம், அதன் உரிமையாளர் லெஜண்ட் சரவணன், உண்மையான பெயர் சரவண அருள் என்பது தான்.
தனது கடையின் விளம்பரங்களில் நடிக்க தொடங்கியவர் அப்படியே சினிமா பக்கமும் வந்தார். கடந்த 2022ம் ஆண்டு இவரது நடிப்பில் லெஜண்ட் என்ற படம் வெளியானது.
ஜேடி-ஜெர்ரி இந்த படத்தை இயக்க ஊர்வசி ரவுடேலா, விவேக், யோகி பாபு, சுமன், நாசர் மற்றும் விஜய்குமார் என நிறைய நடிகர்கள் நடித்திருந்தனர்.
சென்னையில் பிறந்து வளர்ந்த சரவணனுக்கு தற்போது 53 வயது ஆகிறது.
இன்று லெஜண்ட் சரவணனுக்கு பிறந்தநாள், மக்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் சரவணனின் சொத்து மதிப்பு என்று ஒரு விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு ரூ. 6000 கோடி என சொல்லப்படுகிறது. அவரின் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஆண்டு வருமானம் மட்டுமே சுமார் ரூ.2495 கோடி என கூறப்படுகிறது.