நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை..!

tubetamil
0

 குருந்துவத்தை, வோர்டு பகுதியில் நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (26) கிராண்ட்பாஸ், சமகி மாவத்தை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 30 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 35 மற்றும் 48 வயதுடைய கோனவில மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருந்துவத்தை, வோர்டு பகுதியில் கடந்த 23 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்ற நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த காரணத்திற்காகவே குறித்த இரு சந்தேகநபர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top