வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம்

tubetamil
0

 வவுனியா  மாவட்டத்தில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தானவால் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

வவுனியா, நாகர் இலுப்பைக்குளத்தில் நேற்று (09) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தொழில் முனைவோருக்கான விவசாய உபகரணங்கள், கால்நடை வளர்ப்புக்கான பொருட்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவையாளர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top