தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர்
ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் நடிகராக வலம் வருகிறார், ஆனால் திடீரென நடிப்பை நிறுத்தப்போவதாக கூறி ரசிகர்களுக்கு கடும் ஷாக் கொடுத்தார்.
தனது 69வது படம் தான் நான் நடிக்கும் கடைசிப்படம் என கூறி இனி முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய், பிரபலங்கள் ராதிகா மற்றும் சரத்குமார் வீட்டிற்கு சென்ற சம்பவம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது விஜய் சில வருடங்களுக்கு முன்பு திடீரென ராதிகா வீட்டிற்கு சென்றுள்ளார்
, அங்கு அவரது மகன் ராகுல் இருந்துள்ளார்.
விஜய்யை பார்த்ததும் அவர் தனது அப்பா சரத்குமாருக்கு போன் செய்ய, நான் வெளியே இருக்கேன் விஜய் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு விஜய், உங்களை பார்த்த வரலில்லை, ராகுலுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு செல்லலாம் என வந்ததாக கூறியிருக்கிறார்.
வாரிசு படப்பிடிப்பில் சரத்குமார் எனது மகன் Girl Friend பற்றி பேசுகிறான் என கூற, அதற்கு விஜய்யோ விடுங்க சார் இதுதான் வயது என கூலாக சொல்லியிருக்கிறார்.