சன் டிவியில் புதிய சீரியல்.. ஒளிபரப்பாகும் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

tubetamil
0

 சன் டிவியில் புதிய சீரியல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு அந்த சீரியல் தொடங்கும் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பும் வீடியோவுடன் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் பல சீரியல்கள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பதும் டிஆர்பி ரேட்டிங்கில் உள்ள முதல் 10 சீரியல்களில் கிட்டத்தட்ட ஏழு சீரியல் சன் டிவி சீரியல் தான் உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான ’பூவா தலையா’ என்ற சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது என்பதும் நடிகை சித்தாரா நடித்திருந்த இந்த சீரியல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஒரு ஆண்டு முடிவதற்குள்ளேயே முடிக்கப்பட்டது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சீரியலுக்கு பதிலாக ’மணமகளே வா’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த சீரியல் ஜூலை 15ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

‘திருமகள்’ சீரியலில் நாயகியாக நடித்த ஹரிகா சாது இந்த சீரியலின் நாயகியாக நடிக்கிறார். இவர் சமீபத்தில் ’சுந்தரி’ தொடரில் நடித்த அரவிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்கும் முதல் சீரியல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் புரமோ வீடியோ சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top