ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்சவைப் போன்று இல்லை..!

tubetamil
0

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப்  போன்று 'கேம்மேன்' அல்லது தந்திரமானவர் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கதெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவது தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளுக்கு மட்டுப்படுத்துவதற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதியின் ஐந்து வருடம் தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே புதிய திருத்தத்தை கொண்டு வருவதற்கு அமைச்சரவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த சூழ்நிலைகள் தொடர்பான விடயங்களுக்கு மாத்திரமே அவசர சட்டமூலங்களை கொண்டு வர முடியும் என 21ஆவது திருத்தம் தெளிவாக கூறுகிறது.

எனவே, அவசர சட்டமூலமாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

ரணில் ஒரு தந்திரமானவர் என்ற கருத்து நாட்டில் உள்ளது. எனினும், அவர் தந்திரமானவர் அல்லது 'கேம்மேன்' என்று தாம் கூறப்போவதில்லை.


 மகிந்த ராஜபக்ச விளையாட்டின் தலைவன், அவர் அரசியல் கட்சிகளை உடைத்து எடுத்துள்ளார் என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top