ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் இன்று28.08.2024 திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளர். ம.மரியசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் வடமாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் கலந்து கொண்டு குறித்த கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட முகாமையாளர் பெ.ரஞ்சன், மாவட்ட பிரதி அமைப்பாளர் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.