பிரமாண்டமாக உருவாகி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தங்கலான் . இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.சீயான் விக்ரம் - பா. ரஞ்சித் கூட்டணியில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வந்தது.இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பில், தங்கலான் படம் இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெளிவந்த அரண்மனை 4, ராயன், இந்தியன் 2, மகாராஜா ஆகிய தமிழ் திரைப்படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்திருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் தங்கலானும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது