செழிப்பும் மிக்க நல்லூரானுக்கு நாளை தேர்த் திருவிழா!!

tubetamil
0

 பெயருக்கேற்றால் போல பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நாள் நாளை நடைபெறவுள்ளது.

இம்மாதம் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம், நாளை மறுதினம் தீர்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.

நல்லூரில் கொடியேற்றம் முதல் தீர்த்தத் திருவிழா வரை நடைபெறும் விழாக்களின் தத்துவங்கள் பண்டைய நூல்களில் இடம்பிடித்துள்ளன.நாளை இடம்பெறவுள்ள தேர்த்திருவிழாவில் ஆறுமுகப் பெருமான் கஜாவல்லி, மஹாவல்லி சமேத ஸ்ரீ சண்முகப் பெருமானாக எழுந்தருவது வழமை.

நல்லூர்த் தேர் என்பது யாழ்ப்பாணத்தவர்களுக்கு மட்டுமன்றி தமிழர்கள் வாழும் இடமெங்கும் எழுச்சி மிக்க புனித நாளாக கருதப்படும்.

ல்லூர் கந்தனுக்கு அலங்கார கந்தன் என்ற சிறப்பு பெயர் உண்டு.

வடமாகாணத்தில் காணப்படும் முக்கிய முருகன் ஆலயங்களுக்கு விசேட பெயர்கள் கொண்டு அழைக்கப்படும்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் அபிஷேகக் கந்தன் எனவும், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் அன்னதானக் கந்தன் என்றும், நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அலங்காரக் கந்தன் என்றும் அழைக்கப்படும்.மஹோற்சவ தினங்களில் அருளொளி வீசும் கம்பீரமான தோற்றத்துடனும், எல்லையில்லாக் கொள்ளை அழகு தரிசனமும் நல்லூரானின் சிறப்பாகும்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கென்று சில சிறப்பம்சங்களும், தனித்துவமான தன்மைகளும் உண்டு

நேரந்தவறாத ஆறு காலப் பூஜை, அடியவர்கள் அனைவரும் சமமாகப் பாவனை செய்யப்படும் வகையில் ஒரு ரூபா அர்ச்சனைச் சிட்டை என்பன நல்லூரானின் சிறப்பம்சங்கள்.

அதேபோலவே நல்லூர் ஆலயத்தில் தினமும் அதிகாலை வேளையில் இடம்பெறும் பள்ளியெழுச்சியும், மாலை வேளையில் இடம்பெறும் பள்ளியறைப் பூஜையும் நல்லூரின் தனித்துவமான மரபுகளில் ஒன்று.

ஒவ்வொரு நாளும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து முருகப் பெருமானை சிறிய மஞ்சம் ஒன்றில் எழுந்தருளச் செய்து அவரைப் பாடிப் பரவிய படி அழைத்துச் சென்று பள்ளியறையில் அமரச் செய்து திரு ஊஞ்சல் பாடித் துயிலுற வைப்பர்.

காலையில் பள்ளியறை வாயிலில் நின்று திரு நல்லூருத் திருப்பள்ளியெழுச்சி பாடுவர்.பின்பு முருகப்பெருமானை சிறு மஞ்சத்தில் ஏற்றி அழைத்து வந்து மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து அன்றைய நாளின் அபிஷேக ஆராதனைகளை ஆரம்பிப்பதும் தனித்துவமான மரபு.எல்லாவற்றுக்கும் மேலாக நல்லூரில் அமர்ந்து அருளாட்சி புரிகின்ற ஸ்ரீ சண்முகப் பெருமான், பழனி சந்நிதானத்தில் இருக்கின்ற தண்டாயுதபாணி, வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி, மூலவராக அமர்ந்து அருளுகின்ற வேலவர், காவற் கடவுளான வைரவப்பெருமான் மற்றும் நல்லூர்த் தேரடி என்பன மாண்பும் மகிமையும் மிக்க அம்சங்களாகும்


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top