தென் ஆபிரிக்கா, கேப் மாகாணம், லுசிகி நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அருகருகில் இருந்த இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 12 பெண்களும் உள்ளடங்குவர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் சம்பவத்தை நிகழ்த்திவிட்டு தப்பிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், குடும்ப நிகழ்ச்சியொன்றில் அனைவரும் கலந்துகொண்டிருந்த போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது.