இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று(21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுவருகின்றதை அவதானிக்க முடிகிறது.
இத்தேர்தல் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 1,734 அரச உத்தியோகத்தர்கள், 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தனது வாக்கினை வட்டக்கச்சி மாயனூர் வித்தியாலயத்திலே தனது வாக்கினை பதிவு செய்திருந்தார். குறிப்பாக குறிப்பிட்டு இருந்தார் தமிழ் பொது வேட்பாளருக்கு தன்னுடைய வாக்கினை சங்குக்கேபதிவு செய்திருப்பதாகவும் தமிழ் பொது வேட்பாளருக்கான பதிவு செய்வதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு இருந்தார்