50 ஆண்டுகள் தொடர்ந்த ஆராய்ச்சியின் விளைவாக பிரித்தானிய விஞ்ஞானிகள் புதிய இரத்த வகை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
'A', 'B', 'AB', மற்றும் 'O' என உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட நான்கு இரத்த வகைகளின் பட்டியலில் தற்போது 'MAL' என்ற புதிய இரத்த வகையும் இணைந்துள்ளது.
இந்த அரிய இரத்த வகை முதல் முறையாகக் 1972ஆம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டடுள்ளது.
இருப்பினும், குறித்த இரத்த வகைக்கான பரிசோதனை முறை கண்டறியப்படதா நிலையில், இந்த வகை இரத்தம் முழுமையாகப் பரிசோதிக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது பிரித்தானியாவின் NHS Blood and Transplant என்ற விசேட சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக இந்த இரத்த வகையை ஆராய்ந்து, அதற்கான பயன்பாட்டை விளக்கியுள்ளனர்.
இந்த MAL என்ற இரத்த வகை மிக அரிதானது எனவும் தாழ்ந்த இரத்த வகை கொண்ட நோயாளிகளுக்கு பெரும் நன்மை செய்வதாகவும் கருதப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகிற்கு பல்வேறு புதிய சிகிச்சைகளையும் கண்டறிய உதவும் என்றும், இதன் மூலம் அரிதான இரத்த வகைகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை கிடைக்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய MAL இரத்த வகையினால், இரத்த மாற்று (Blood Transfusion) சிகிச்சைகள் இன்னும் பாதுகாப்பாக நடக்க வழிவகுக்கும் என்பதுடன் இரத்த தானம் செய்வதில் உள்ள சிக்கல்கள் குறைவதோடு, இரத்த தானம் செய்யும் அளவு அதிகரிக்கவும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், MAL இரத்த வகையின் கண்டுபிடிப்பு AnWj எனப்படும் எதிர்ப்படலங்கள் (Antibodies) கொண்ட நோயாளிகளை அடையாளம் காண உதவும் என்றும் புதிய மருந்துகளை உருவாக்குவதற்கும் வழி வகுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், AnWj எதிர்ப்படலங்கள் குறைவாக இருக்கும் நோயாளிகள் நோய்களுடன் போராட முடியாமல் இருப்பதால், இதை அடையாளம் காண்பது அவசியமாகிறது. இதன் மூலம், AnWj எதிர்ப்படலங்களை கொண்ட இரத்த தானத்தாரர்கள் மற்றும் இரத்தம் பெறுபவர்களை கண்டறிவது எளிதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
அது மாத்திரமின்றி, அரிதான இரத்த வகைகள் கொண்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்க MAL இரத்த வகை கண்டுபிடிப்பு மருத்துவ துறையின் பாரிய முன்னேற்றம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.