பிரித்தானியாவில் - நார்த்தாம்டன்ஷையர் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் கேட்டரிங் அடுப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது Kettering பொது வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடமடபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கருதவில்லை என நார்த்தாம்டன்ஷையர் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அந்த அடுப்புக்குள் அந்த நபர் எவ்வாறு வந்து சேர்ந்தார் என்பது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் விளக்கம் அளிக்கப்படவில்லை என நார்த்தாம்டன்ஷையர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளனர்.