நடிகர் நெப்போலியன் கடைசி ஆசை பற்றி பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.
சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.
நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் நெப்போலியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில், “ நான் 16 வயதிலிருந்து அரசியலில் நுழைந்தேன். என்னுடைய மாமா கே.என் நேரு அமைச்சராக இருந்த போது அவருக்கு பிஏவாக நான் இருந்தேன். பிறகு நடிக்க வேண்டும் என்று ஆசை வந்ததால் நடிக்கத் தொடங்கினேன். ஆனாலும் அரசியலை விட்டு விலகவில்லை.
அதற்குப் பிறகு எம்.எல்.ஏ வாகி மினிஸ்டர் ஆகவும் இருந்திருக்கிறேன். ஆனால், என்னுடைய குடும்பத்திற்காக நான் அரசியல் மற்றும் சினிமாவை விட்டுவிட்டு விலகி தற்போது லண்டனில் வசித்து வருகிறேன்.
நான் செத்தால் கூட இப்படி ஒரு மனுஷன் நம்மோடு வாழ்ந்துட்டு போயிருக்காரு என்று நம்மோடு இருப்பவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் இது தான் என்னுடைய கடைசி ஆசை..” என உருக்கமாக பேசியிருக்கிறார்.
இந்த செய்தி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.