சமூக நலன் கருதி நடைப்பயணத்தில் இளைஞன் ஒருவன் இலங்கையை வலம்வரும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மட்டக்குளியை சேர்ந்த இக்ரம் எனும் இளைஞர்
01.09.2024 அன்று கொழும்பு மட்டக்குளியில் இருந்து பல இலக்குகளை முன்வைத்து நடைப்பயணம் ஒன்றினை ஆரம்பித்திருந்தார். அதன்படி 24 காவது நாளான நேற்று புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
குறித்த இளைஞன் புற்று நோயாளர்களுக்காக நிதி சேகரித்து அவர்களுக்கான சிகிச்சை வழங்குவது, இளைஞர்களை போதைவஸ்துக்கு அடிமையாகாமல் பாதுகாக்க வேண்டும், வறுமையில் வீதிகளில் தவிக்கும் உறவுகளின் தரவுகளை திரட்டி சமூகவலைதளங்கள் ஊடாக உதவி கோரி உதவிகளை பெற்றுகொடுப்பது என மூன்று இலக்குகளினை வைத்து குறித்த நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் செயற்பாட்டை பார்த்த மக்கள் அனைவரும் அதிசயமாக பார்த்து வருவதும் குறிப்பிடதக்கது.