கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் மற்றும் முகமாலை கிராம அலுவலர் பிரிவுகளில் 1,142,563 சதுரமீற்றர் பகுதியில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, அப்பகுதிகள் விரைவில் குறித்த நிறுவனத்தால் கையளிக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள பகுதிகளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிறுவன உத்தியோகத்தர்கள், இத்தாவில், முகமாலை கிராம அலுவலர்கள், முகமாலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், மீள்குடியேற்ற உத்தியோகத்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவன அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.