தற்காலிகமாக கடமையாற்றிய கடித விநியோக உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இதன்போது புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் குறித்த வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்காலிகமாக கடமையாற்றிய குறித்த கடித விநியோக உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.