மன்னார்-முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானாட்டான் பிரதேசத்தில் மதுபானம் அருந்தி உந்துருளி செலுத்திய இரண்டு பேர் முருங்கன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் நானாட்டான் சுற்றுவட்ட சந்தியில் இடம்பெற்றது.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அரிப்பு துறையை சேர்ந்த ஒருவரும் நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த முருங்கன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.