ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய அந்த பேருந்துகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் தொடர்பான பொலிஸாரின் பணிகளுக்காக 175 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட தொலை தூர பேருந்து சேவையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று விசேட தொடருந்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.