கிளிநொச்சி மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தல் 2024 இற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும், எட்டு வாக்கு எண்ணும் நிலையங்களும் காணப்படுகின்றன என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளுக்காக 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஒரு லட்சத்து தொள்ளாயிரத்து ஏழு
வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர்.
40பேருந்துகளில் வாக்குக் பெட்டிகள் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு
பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.