தசைகள், திசுக்கள் மற்றும் மூளையில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆற்றல் மூலமாக மனித உடலுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது. எந்த நேரத்திலும், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு கணையத்தால் வெளியிடப்படும்.
இந்த நிலையின் போது ‘இன்சுலின்’ என்ற ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில், கணையத்தால் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவில் இல்லை அல்லது உடல் செல்கள் இன்சுலினை இதன்போது எதிர்க்கும்.
இதன் விளைவாக இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகரிக்கின்றன, இது பொதுவாக உயர் இரத்த சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரை அளவை இயற்கையில் காணப்படும் மூன்று இலைகளால் குறைக்கப்படுகின்றது. அது எந்தெந்த இலைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை பொதுவாக எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒரு மூலிகையாகும். இந்த கற்றாழை பல தேவைகளுக்கு பயன்படுகின்றது. இதை காலையில் வெறுவயிற்றில் அதன் உள்ளீட்டை மட்டும் தனியாக எடுத்து குடிக்க வேண்டும்.
இப்படி செய்தால் கற்றாழை இன்சுலின் அளவை அதிகரித்து சக்கரை வியாதியை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும். இது ஆராய்ச்சியாளர்களால் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சக்கரை நோயாளர்களுக்கு கற்றாழை வெறுவயிற்றில் குடிக்க மிகவும் உகந்தது.
சீதாப்பழம் மிகவும் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான ஒரு பழமாகும். இந்த பழத்தை NCBI-ன் ஆய்வின் படி இதன் இலைகள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
சீதா இலைகள் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடலில் இருக்கும் இரத்த சர்க்கரை அளவு குறைக்கிறது. இதை சக்ரை வியாதி இருப்பவர்கள் முடிந்தவரை ஏதோ ஒரு வகையில் இதை சாப்பிட்டு வந்தால் நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.
வேப்பிலை பொதுவாக பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் வேப்பிலை நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் என்று NCBI-யின் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால் இயற்கையான செயல்முறை மூலம் இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது. உடலில் காணப்படும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேப்ப இலைகளில் மிகுந்த பண்புகள் காணப்படகின்றது.
நாம் அகைவரும் செயற்கை முறையில் உற்பற்த்தி செய்யும் மருந்துகளை உட்கொள்வதை விட இயற்கையில் காணப்படும் மூலிகைப்பொருட்களை உண்பதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் நோய்களையும் எதிர்த்து போழராட உதவும்.