பந்தயதில் வெற்றி: வீடற்ற குடும்பத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்..!

tubetamil
0

 ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட பந்தயங்களில் ஒரு குழுவினர் பெருமளவு பணத்தை வென்றுள்ளனர்.

கதிர்காமம், திஸ்ஸமஹாராம போன்ற பகுதிகளிலுள்ள வர்த்தகர்கள் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என பந்தயம் கட்டியிருந்தனர்.

அதில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை அடிப்படையாக கொண்டு பந்தயம் கட்டப்பட்டிருந்தது. செல்லகதிர்காமம் பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என 25 லட்சம் பந்தயம் கட்டி தோற்றுள்ளார். அவருடன் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய வர்த்தகர் வெற்றி பெற்றுள்ளார்.


அநுர என பந்தயம் கட்டி 25 லட்சம் ரூபாயை வென்ற வர்த்தகர், அந்த பணத்தின் மூலம் வீடற்ற குடும்பம் ஒன்றுக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பந்தயம் கட்டிய பல வர்த்தகர்கள் தமது உடமைகளை இழந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பணம், வீடு, தங்க நகைகள், வாகனங்கள் என்பன பந்தயத்தில் ஈடு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top