ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை.!!

tubetamil
0

 தேர்தல் கலவர சம்பவங்களை உருவாக்க வேண்டாம் என வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நேற்று அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைககள் மிகவும் பரபரப்பான நிலையை எட்டியுள்ள நிலையில் கலவரங்களை ஏற்படுத்த வேண்டாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தை மீற வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


வேட்பாளர்களுக்குப் பதிலாக அவர்களின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தின் முன் நிறுத்தப்பட்டு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் பிரச்சார ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top