புத்தளம், உடப்புவ மற்றும் மதுரங்குளிய ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளம் காதல் ஜோடி அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 30 மற்றும் 31ஆம் திகதிகளில் இந்த காதல் ஜோடி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உடப்பு சின்னப்பாடுவ பகுதியை சேர்ந்த கவீஷ லிவேரா என்ற 19 வயதுடைய இளைஞனும், மதுரங்குளிய பெட்ரிக் மாவத்தையை சேர்ந்த நிம்சானி பிரமோதிகா என்ற 19 வயதுடைய யுவதியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் பாடசாலை காலத்தில் இருந்தே காதல் தொடர்பில் இருந்ததாகவும், பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 30ஆம் திகதி பிற்பகல் இளைஞன் உயிரிழந்த நிலையில், அடுத்த நாள் 31ஆம் திகதி மாலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
தூக்கில் தொங்கிய மகளை மீட்ட தந்தை, முந்தலம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இருவரின் மரணம் தொடர்பில் மர்மம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர்கள் மரணம் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.