இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, தமது நாடடவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது
செப்டம்பர் 21, அன்று திட்டமிடப்பட்ட தேர்தலுக்கு முன்னர் அல்லது அதற்குப் பின்னர் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம் என்று அந்த ஆலோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில சமயங்களில், போராட்டங்களை கலைக்க பொலிஸார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தலாம் என்றும் அந்த ஆலோசனை எச்சரிக்கிறது.
பயண ஆலோசனை
அமைதியானவை கூட,விரைவில் வன்முறையாக மாறக்கூடும்.எனவே அமெரிக்க குடிமக்கள் கூட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் தமது நாட்டுப் பயணிகள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக சுற்றுலா இடங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களில், உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இலங்கையில் தமது நாட்டவர்களுக்கான பயண ஆலோசனையில் தெரிவி;த்துள்ளது.