இலங்கை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்து போது, கடனுதவி வழங்கிய பங்களாதேஷின் இன்றைய நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது.
அந்நாட்டில் மாணவர்கள் போராட்டத்தினால் அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகிறது.
அந்நாட்டு அரசாங்கம் போதிய நிதி கையிருப்பின்றி தவித்து வருகிறது. இந்நிலையில் பங்களாதேஷ முழுவதும் இருளில் மூழ்கும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷிற்கு மின்சாரத்தை வழங்கும் அதானி நிறுவனத்திற்கு பெருந்தொகை டொலர்களை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது.
தமக்கு செலுத்த வேண்டிய சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதில் பங்களாதேஸின் இடைக்கால நிர்வாகம் தாமதம் காட்டி வருவதால் மின்சாரம் வழங்குவதை நிறுத்தப்போவதாக இந்திய நிறுவனமான அதானி குழுமம் எச்சரித்துள்ளது.
இதேவேளை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் கடன் வசதியின் கீழ் பங்களாதேஷ் அரசாங்கம் செயற்பட்டு வந்தது.
நெருக்கடியான நிலையில் அவரமாக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் கோரியுள்ளது.
இதேவேளை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை தற்போது படிப்படியாக மேலெழுந்து வருகிறது.இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் ஜனாதிபதியை பொறுத்து இலங்கையின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படவுள்ளது.
தற்போதைய நிலையில் தான் தோற்கடிக்கப்பட்டால் இலங்கை பாரியதொரு நெருக்கடி நிலைமை எதிர்கொள்ளும் என சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருகின்றார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.