சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா மற்றும் மொஹமட் சமி ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்டில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்.
அதேநேரம் சத்திரசிகிச்சையின் பின்னர் இன்னும் 100 வீதம் குணமாகாமையால், சமி இந்த தொடரில் பங்கேற்கவில்லை.இதற்கு பதிலாக அணியில் அர்ஸ்தீப் சிங் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அத்துடன் மொஹமட் சிராஜ் மற்றும் முகேஸ்குமார் ஆகியோரும் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.