யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
கலைப்பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கே. ஶ்ரீகணேசன் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. ஶ்ரீகணேசனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் அன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் ஆடிப்படையில், ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.ஶ்ரீகணேசன் ஆங்கில மொழி கற்பித்தலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.