புலம்பெயர் தொழிலாளர்களின் குற்றச்சாட்டு...!

tubetamil
0

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, இலங்கைக்கு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்  கவலை வெளியிட்டுள்ளார்.

பல இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தேர்தலுக்கு வர ஆர்வமாக உள்ளனர்.எனினும் காலாவதியான கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை புதுப்பிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக விஜித ஹேரத், செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களித்தால், தமக்கு பாதகம் என்பதால், இந்த விடயங்கள் தீவிரமடைய அரசாங்கம் வேண்டுமென்றே அனுமதித்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு ஊழல் பேரங்களே முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top