வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
சமபவத்தில் 39 வயதுடைய பு.லோயினி என்ற இரண்டுபிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்றயதினம் இரவு வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்துள்ளார்.இந்நிலையில், அவர் அரைக்கு என்று அதிகாலையில் பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும், அவரது கணவர் அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் நிலையில் 13 வருடங்களின் பின் ஒரு சில நாட்களுக்கு முன்பாகவே நாடு திரும்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.