ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இரகசிய உடன்படிக்கை எதுவும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.அநுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியை முறியடித்து, எதிர்க்கட்சியில் சக்தி வாய்ந்த சக்தியாக மாறியுள்ளது என்பதையே ரணில் விக்ரமசிங்க கூறி வருகிறார்.
இது ஐக்கிய மக்கள் சக்தியின் பலவீனத்தால் ஏற்பட்டுள்ளது என்பதையே அவர் வலியுறுத்தி வருவதோடு, அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடு இது அல்ல என்று அகில விராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சிகளுக்குள்ளும் பிளவுகள் உள்ளதாக அகில விராஜ் தெரிவித்துள்ளார்.