கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 55 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை டுபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானமான EK-648 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது, இந்த சிகரெட் பொதிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.