இலங்கையின் கல்வி அமைச்சர் யார்? என்ற கேள்விக்கு கொழும்பில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் மாணவன் அளித்த பதில் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது
குறித்த பாடசாலையின் தவணைப் பரீட்சையில் இந்த கேள்வி இடம்பெற்றிருந்தது குறித்த பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சரியான பதிலை வழங்கவில்லை.
எனினும் ஒரு குறிப்பிட்ட மாணவரின் பதில் பலரை மகிழ்வித்தது. அவர் இலங்கையின் கல்வி அமைச்சர் ஜோசப் ஸ்டாலின் என்று பதிலளித்திருந்தார்.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை விட ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தொலைக்காட்சிகளிலும் ஏனைய ஊடகங்களிலும் அதிகம் தோன்றுகிறார் என்ற அடிப்படையில் குறித்த மாணவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.