ஜனாதிபதி தேர்தலி்ல் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் 53 இலட்சம் வாக்குகளையும் இரண்டாவது இடத்தை பெறும் வேட்பாளர் 45 இலட்சம் வாக்குகளையும் பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன்படி, இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நான்கு பிரதான வேட்பாளர்கள் 50 வீதத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அது மிகவும் கடினமான நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் நாட்டின் பிரதான வேட்பாளர் ஒருவருக்கு உதவுவதாகவும், அவர்கள் தண்ணீர் மற்றும் உணவுப் பொதிகளை விநியோகிக்க பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
நாளை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் பிரதான வேட்பாளர்கள் இருவர் மற்றும் அமைச்சர்கள் பலர் தமது மனைவி மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்களில் தங்குவதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.