இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தமக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத ஊடக நிறுவனங்களுக்கு ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளை வெளியிடப்போவதில்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
தேர்தல் அறிக்கைகளை வெளியிடும் போது ஊடக வழிகாட்டுதல்களை மீறும் அல்லது பின்பற்றாத எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது எனினும், ஆணைக்குழு அத்தகைய ஊடக நிறுவனங்களிலிருந்து விலகி இருக்க முடியும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பல்வேறு டிஜிட்டல் படிவங்கள் மூலம் ஆணையம் அதிகாரபூர்வ முடிவுகளை ஆணைக்குழு, ஊடக நிறுவனங்களுக்கு வழங்கும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.