தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த கோட் படம் இன்று வெளியாகிவிட்டது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 5, இன்று படு மாஸாக உலகம் முழுவதும் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா பல வருடங்களுக்கு பிறகு விஜய்யின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விஜய் நேற்றே தனது குடும்பம் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து படம் பார்த்துள்ளார்.
இன்று காலை வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா, நடிகை த்ரிஷா, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை கீர்த்தி சுரேஷ் என பலர் முதல்நாள் முதல் காட்சியே ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளனர்.