இலங்கையை இன்னும் பத்து வருடங்களில் ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவோமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
களுத்துறை - அகலவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாட்டை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும், நாட்டுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவேன் எனவும் இதன்போது அவர் உறுதியளித்துள்ளார்.
நாங்கள் கொள்கை ரீதியான அரசியல் கட்சி. அடுத்த 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கின்றோம் என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிடக்காட்டினார்.