யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..!!

tubetamil
0

யாழ்ப்பாணத்தில் வீட்டு கிணற்றடியில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதன்போது, ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார். 

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,குறித்த நபர் நேற்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் தோட்டத்திற்கு சென்று தோட்ட வேலையை செய்து விட்டு 9:30 மணி அளவில் வீட்டுக்கு வந்து குளிப்பதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார்.


இந்நிலையில், குளிப்பதற்கு சென்ற கணவன் நீண்ட நேரமாக திரும்பி வராத காரணத்தினால் மனைவி கிணற்றடிக்கு சென்று பார்வையிட்டவேளை கணவன் நிலத்தில் விழுந்த நிலையில் அசைவற்று இருந்துள்ளார்.இதனையடுத்து, அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதர வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.


உடற்கூட்டு பரிசோதனைக்காக சடலமானது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top