டாயானாவை காப்பி அடிக்கும் ஹரியின் மனைவி...!!

tubetamil
0

 டயானாவைப்போலவே இளவரசர் ஹரியின் மனைவி மேகன் உலகம் சுற்றத் துவங்கியுள்ள விடயம், வரலாறு திரும்புகிறதோ என மன்னர் சார்லசை பயப்பட வைத்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இளவரசி டயானா மன்னர் சார்லசைப் பிரிந்ததும், உலகம் சுற்றப் புறப்பட்டார். உலகின் மொத்த கவனமும் டயானாவை நோக்கித் திரும்பியது. அவருடைய புகழுக்குமுன், சார்லஸ் முக்கியத்துவம் இல்லாதவர் போல் ஆகிவிட்டார்.

சார்லசைப்பொருத்தவரை, காத்திருப்பிலேயே கழிந்துபோனது அவரது வாழ்வு.

பிரித்தானிய இளவரசராக இருந்தபோதும், வருங்கால மன்னர் என்னும் நிலையில் இருந்தபோதும், மகாராணி எலிசபெத் புகழ் பெற்றதுபோலவோ, அல்லது இளவரசி டயானா புகழ் பெற்றதுபோலவோ அவரால் புகழ் பெற முடியவில்லை.



சொல்லப்போனால், டயானா பக்கமும் தவறு இருந்தும், சார்லஸ் டயானாவுக்கு செய்த துரோகம் மட்டுமே அதிகம் பேசப்பட்டது.

அத்துடன், அரியணையேறவும் 73 வயது வரை காத்திருக்கவேண்டியிருந்தது.இந்நிலையில், ராஜ குடும்பத்தைப் பிரிந்ததும் உலகம் சுற்றப் புறப்பட்ட டயானாவைப்போலவே, தற்போது ராஜ குடும்பத்தைப் பிரிந்த இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் உலகம் சுற்றப் புறப்பட்டுள்ளார்கள்.

ஆக, டயானா தன்னைப் பிரிந்து உலக சுற்றப் புறப்பட்டதும் உலகின் கவனம் முழுவதும் தன்னைவிட்டு டயானா மீது திரும்பியதுபோல, இப்போது உலகின் கவனம் ஹரி மேகன் மீது திரும்பிவிடுமோ என மன்னர் சார்லஸ் அஞ்சுவதாக Woman என்னும் பிரித்தானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



அதாவது, வரலாறு மீண்டும் திரும்புகிறதோ என மன்னர் சார்லஸ் அஞ்சுவதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top